Pages

Friday 31 January 2020

Accused Photo



Accused Photo எடுப்பது தொடர்பாக நமது காவல் நிலை ஆணைகள் பின்வருமாறு.....


PSO 646 . விசாரணைக் கைதிகளை நிழற்படம் பிடித்தல் :
(1) சிறைக் கைதிகள் அடையாளங் காணல் சட்டம் 1920ன் பிரிவு 4 & 5ல் கண்டுள்ள வரையறைகளுக்குட்பட்டு , விசாரணைக் கைதிகளை நிழற்படம் பிடிப்பது அனுமதிக்கப்படும்

(2) நபரொருவர் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கடுஞ்சிறைத் தண்டனை விதிக்கத்தக்க தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பின் , காவல் அதிகாரி வேண்டியபடி , குறித்துரைக்கப்பட்ட வகையில தனது அளவுகளை அளந்து கொள்ள அனுமதிக்கவேண்டும் . ( பிரிவு 4 )

(3) புலனாய்வு அல்லது கு . வி . மு . சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின் நோக்கத்தில் குற்றவியல் துறை நடுவர் உளநிறைவு கொண்டு , காவல் அலுவலர் அளவு அல்லது நிழற்படம் நேர்வுக்கேற்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு நபரொருவரை நெறியுறுத்தலாம் . ( பிரிவு 5 )

(4) கீழ்க்கண்ட இடங்களில் நிழற்படம் எடுத்திடலாம் .
( ) சிறைச்சாலை
( ) குற்றவியல் துறை நடுவர் நீதிமன்றம்
( ) காவல் நிலையம் மற்றும் புறக் காவல் நிலையம்
( ) காவல் நிலைய சிறை அறை ( விதி 1 & 2 )

(5) அளவுகள் மற்றும் நிழற்படம் எடுக்கப்பட வேண்டிய நபர் எதிர்ப்பு தெரிவித்து அல்லது அனுமதிக்க மறுத்தால் , அனைத்து வழிகளையும் பின்பற்றி அதனைச் செய்வது சட்டமுறையானதாகும் . ( பிரிவு 6 ( 2 ) |

(6)
அளவுகள் மற்றும் நிழற்படம் எடுக்க எதிர்ப்பு தெரிவிப்பது அல்லது அனுமதிக்க மறுப்பது இ . . . பிரிவு 186ன் கீழான குற்றமாகும் .


PSO 821 நிழற்படங்கள் பதிவு அறிவுரைகள் (1)(b)(i) இந்திய தண்டனை விதி தொகுப்பு 12 அல்லது 17 வது அத்தியாயத்தின் கீழ் வருபவை களும் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்பட தக்கவையுமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் வழக்கமாய் குற்றம் செய்பவர்கள் என்று நம்பப்படுகின்ற அவர்களும் நபர்களின் நிழற்படங்களை எடுக்கச் செய்யலாம்

(1)(b)(ii) எவருடைய நிழற்படங்களும் புலனாய்வு காரியங்களுக்காகவும் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் உத்தரவுகளின்படி தேவைப்பட்டால் அத்தகையவர்களின் நிழற்படங்களை எடுக்க செய்யலாம்

(1)(b)(iii) இந்திய தண்டனை விதி தொகுப்பின் கீழ் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அயல் நாட்டவரின் நிழற்படங்களை எடுக்கும்படி செய்யலாம்.

Note :

PDEOs அனைவரும் தங்கள் காவல் நிலையத்தில் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் Accused Photo upload செய்யவும்.

CCTNS - Camera அல்லது Mobile to CCTNS Mail க்கு அனுப்பபட்ட புகைப்படமாக இருந்தாலும் சரியான முறையில் Crop மற்றும் Resize (150) செய்து upload செய்யவும். 

CIPRUS Application ல் ஒரு வழக்கின் எந்த நிலையிலும் Accused Photo upload செய்ய முடியும்.


                                                                                                forpdeos.blogspot.com

No comments:

Post a Comment