Pages

Tuesday, 2 January 2018

CCTNS - பொதுமக்களுக்கான பயன்பாடுகள்.


குற்றம் மற்றும் குற்றாவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் திட்டம்
Crime & Criminal Tracking Network and Systems – CCTNS

CCTNS    திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வசதிகளை செய்து தந்துள்ளது. பொதுமக்களுக்கான அனைத்து பயன்பாடுகளையும் காவல்துறையினர் தெரிந்து கொண்டு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் மத்திய அரசின் இத்திட்டமானது இன்று இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களும் CCTNS வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: eservices.tnpolice.gov.in


CCTNS திட்டத்தினால் பொதுமக்களுக்கான பயன்பாடுகள்.

                        1.    Register Online Complaints:
இணையதள சேவை வழியாக புகார் பதிவு செய்திடவும் மேலும் தங்களுக்கு தெரிந்த காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று தெரிவிக்கமுடியாத குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை பற்றிய தகவல்களை இதன் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.

2.    Online Complaints Status: -
தங்கள் பதிவு செய்த Online Complaints தற்போதைய நிலை குறித்தும் தங்கள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிய முடியும்.

3.    FIR Status:-
தங்கள் சம்மந்தப்பட்ட FIR ன் தற்போதைய நிலை குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிய முடியும்.

4.    CSR Status:-
தங்கள் சம்மந்தப்பட்ட CSR ன் தற்போதைய நிலை குறித்தும் தங்கள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிய முடியும்.

5.    Vehicle Status

பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் வாங்கும் போது அந்த வாகனம் ஏதேனும்  வழக்கில் சம்மந்தப்பட்ட வாகனமா? என்பதை அறிய முடியும்.

6.    View FIR

பொதுமக்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR ன் நகலினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7.    Download Road Accident Documents

பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை எளிதாக இனணயதளம் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.

புலன் விசாரணையின் போது காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட அவர்களது கைப்பேசி (OTP அந்த எண்ணிற்கு அனுப்பபடும்) எண்ணை அடிப்படையாகக் கொண்டு  பயனீட்டாளருக்கு ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.  நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ரூ.10/-  ஒரு ஆவணத்திற்கு செலுத்தி ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

8.    Lost Document Report

கீழ்கண்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையம் அணுக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவை 31.08.2017 ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.

·     பாஸ்போர்ட் (Passport)
·     R.C. புத்தகம் (R.C.Book)
·     ஓட்டுநர் உரிமம் (Driving License)
·     பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School College Certificates)
·     அடையாள அட்டைகள் (ID Cards)

இணையதளத்தில் புகார் பதிவு செய்து Lost Document Report னை உடனே பதிவிறக்கம் செய்து அதனை சம்மந்தப்பட்ட துறையில் சமர்ப்பித்து ஆவணங்களை பெற்று கொள்ள முடியும்.

      9.   Found By NGO

தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வரும் தங்கள் சுய விபரங்கள் கூற இயலாதவர்களின் பட்டியல் அனைத்தும் இதில் உள்ளது.

10.   Missing & Un-ID

காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள் பற்றிய விபரங்கள் புகைப்படத்துடன் மேற்கண்ட இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


-----------------------------------------------------


Police Verification Services : 



காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற ஒரு புதிய இணையவழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment