கீழ்கண்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையம் அணுக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவை 31.08.2017 ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
· பாஸ்போர்ட் (Passport)
· R.C. புத்தகம் (R.C.Book)
· ஓட்டுநர் உரிமம் (Driving License)
· பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School College Certificates)
· அடையாள அட்டைகள் (ID Cards)
இணையதளத்தில் புகார் பதிவு செய்து Lost Document Report னை உடனே பதிவிறக்கம் செய்து அதனை சம்மந்தப்பட்ட துறையில் சமர்ப்பித்து ஆவணங்களை பெற்று கொள்ள முடியும்.
Step : 1
தமிழ்நாடு காவல் துறையின் வலைப்பக்கத்தில் eservices.tnpolice.gov.in Lost Document Report என்கிற icon யை click செய்யவும்.
Step : 2
புதியாக Apply செய்பவர்கள் Report என்கிற link னையும் click செய்து கொள்ளவும்.
Step : 3
தங்களுடைய விபரங்களை பதிவு செய்யவும்.
Step : 4
தொலைந்து போனா ஆவணத்தை மற்றும் தொலைந்த இடம் நேரம் சரியாக Select செய்யவும்.
· பாஸ்போர்ட் (Passport)
· R.C. புத்தகம் (R.C.Book)
· ஓட்டுநர் உரிமம் (Driving License)
· பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School College Certificates)
· அடையாள அட்டைகள் (ID Cards)
தங்களிடம் தற்போது உள்ள எதேனும் ஒரு ID proof upload மற்றும் online மூலமாக 50/- ரூபாய் payment என அனைத்து Process களும் Complete செய்யவும்.
Step : 5
மேற்கண்டவாறு அனைத்து Process களும் complete செய்து submit செய்த பின் உடனடியா Lost Document Report உடனடியாக Download மற்றும் உங்களது பதிவு செய்துள்ள உங்களது mail க்கு ஒரு copy அனுப்பபடும்.
இந்த Lost Document Report னை சம்மந்தப்பட்ட துறையில் (RTO, Passport, School/Collage(University)) சமர்பித்து அந்த துறையின் நடைமுறையின் படி புதிய ஆவணத்தை பெற்று கொள்ளலாம்.
Lost Document Report Model
NOTE:-
இந்த விண்ணப்பம் தமிழகத்தில் மட்டுமே இழந்த ஆவணங்களின் அறிக்கையை பதிவு செய்வதற்கானது.
'தொலைந்த ஆவண அறிக்கை' உருவாக்கிய கணினியின் நகல் தானாக நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.
இந்த விண்ணப்பத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விசாரணை / விசாரணைக்கு உட்பட்டது அல்ல.
காவல்துறைக்கு தவறான அறிக்கை தண்டனைக்குரிய குற்றமாகும்.
கட்டணம் செலுத்திய பிறகு நெட்வொர்க்கின் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் எல்.டி.ஆர் பதிவிறக்கம் செய்ய டவுன்லோட் எல்.டி.ஆர் விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment